உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / யூ டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வீசிய வாலிபர் கைது

யூ டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வீசிய வாலிபர் கைது

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இருந்து முட்டம் செல்லும் சாலையின், குறுக்கே திருச்சிக்கு செல்லும் பைபாஸ் சாலையில் பாலம் உள்ளது. இந்த பாலத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், போதை நபர்ஒருவர் கீழை செல்லும் சர்வீஸ் சாலையில், பெட்ரோல் குண்டு வீசினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.தகவலறிந்து வந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.அதில் அவர் காட்டுமன்னார்கோவில், கக்கன் நகர் தங்கப்பன் மகன் ஆனந்தராஜ், 23; என்பதும், அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய அவர் போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார். மேலும், மொபைல் போனில் 'யூ டியூப்' பார்த்து, பெட்ரோல் குண்டு தயாரித்து வீசியதாவும் தெரிவித்துள்ளார்.இது குறித்து காட்டுமன்னார்கோவில், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை