உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாநகராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறை காற்றில் பறந்தது

கடலுார் மாநகராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறை காற்றில் பறந்தது

கடலுார், : கடலுாரில் உள்ள அரசு அலுவலகம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் தேர்தல் நடத்தை விதி முறை காற்றில் பறந்துள்ளது.தமிழகத்தில் வரும் ஏப்., 19ல், லோக் சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், போட்டோக்களை மூடி வைக்கவும், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறையை காற்றில் பறக்கவிடும் வகையில், கடலுார் கருவூலத்தில் நேர்காணல் மற்றும் கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பேனர்களில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டோக்கள் மறைக்கப்படாமல் உள்ளது. எனவே, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ள கடலுார் மாநகராட்சியில் அரசு அலுவலகங்களில் தேர்தல் விதிமுறை மீறல்கள் அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர், முன்னாள் முதல்வர் போட்டோக்களை அகற்ற மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை