| ADDED : மே 08, 2024 12:20 AM
கடலுார்: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்டு மாற்றுத் திறனாளிகள் மனு அளித்தனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமையில் நிர்வாகிகள் கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனு:கடலுார் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட கிராமங்களில் கடந்த 4 மாதங்களாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிகள் நடைபெறவில்லை. இதனால், வேலை கிடைக்காமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, சான்றோர்பாளையம், சுத்துக்குளம், பீமாராவ் நகர், மணக்குப்பம், பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, பில்லாலி தொட்டி, வைரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இனியாவது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஹரிநாராயணன், தமிழ்ச்செல்வி, ஜெயபால், பரமசிவம், பழனி உடனிருந்தனர்.