உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / த நியூ ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி

த நியூ ஜான்டூயி பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பண்ருட்டி: பண்ருட்டி த நியூ ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 119 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் பெற்றனர்.பள்ளி அளவில் மாணவி சப்ரினா 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி தேவதர்ஷினி 490 பெற்று 2ம் இடம், மாணவிகள் துர்கா ஸ்ரீ, யுவஸ்ரீ, மாணவர் மோகன்ராம் 488 பெற்று 3ம் இடம் பெற்றனர். மாணவி அர்ஷியா பாத்திமா 487, மாணவி தர்ஷிணி 486 மதிப்பெண்களும், காயத்ரி, பவன் பாலாஜி, நந்தகுமாரன் ஆகியோர் 484, மாணவி யாஷினி, வாஜிதா த பஸ்சும் 480 பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.கணிதத்தில் 12 பேர், அறிவியலில் இருவர் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றனர். 490 க்கு மேல் 2 பேர், 480 க்கு மேல் 12 பேர், 450க்கு மேல் 46பேரும், 400க்கு மேல் 86 பேரும் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வீரதாஸ், முதன்மை முதல்வர் வேலண்டினா லெஸ்லி, முதல்வர் உமாசம்பத், பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ