உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிணற்றில் மூதாட்டி உடல் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

கிணற்றில் மூதாட்டி உடல் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அருகே தரைக்கிணற்றில் மூதாட்டி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் இருதயசாமி. இவரது மனைவி அந்தோணியம்மாள், 70; இவர் கடந்த 8 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்த அவர், அதிகாலை, வீட்டு அருகே உள்ள தரைக்கிணற்றில் இறந்து கிடந்தார். இயற்கை உபாதைக்காக வெளியில் சென்றவர் கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என,கூறப்படுகிறது.இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை