உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ.,வை தாக்கிய ௩ பேர் கைது

வி.ஏ.ஓ.,வை தாக்கிய ௩ பேர் கைது

சிதம்பரம்: மயிலாடுறை மாவட்டம், கொள்ளிடத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 36; வி.ஏ.ஓ.,வான இவர் கடந்த 12ம் தேதி இரவு உறவினர் நீலகண்டனை பஸ் ஏற்றி விடுவதற்காக பைக்கில் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.அப்போது, அங்கிருந்த கும்பல் ஜெய்சங்கரிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினர். புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சிதம்பரம் கொத்தங்குடி தெரு ரங்கராஜன் மகன் சரண்ராஜ்,30; குமார் மகன் சூர்யா,24; மெய்காவல் தெரு குமார் மகன் கீர்த்திவாசன்,21; ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான, கொத்தங்குடி தெரு சந்தோஷ், நித்தீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ