| ADDED : ஆக 18, 2024 05:19 AM
கடலுார் : கடலுார் அருகே ஒரே இரவில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த காரைக்காட்டை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 37; காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே இ சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்தபோது, கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கள்ளாவில் இருந்த ரூ.700 திருடப்பட்டிருந்தது.அதேபோன்று அதே பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடை, மளிகைக் கடை ஆகியவற்றின் பூட்டுகளையும் உடைத்து, பணத்தை திருடி சென்றனர்.இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த வடலுார் கருங்குழியை சேர்ந்த கேசவபெருமாள் மகன் சம்பத்குமார், 21; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடியை அவர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து, சம்பத்குமாரை போலீசார் கைது செய்தனர்.