உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முந்திரி வியாபாரிகளை ஏமாற்றிய பெண் சிறைபிடிப்பு

முந்திரி வியாபாரிகளை ஏமாற்றிய பெண் சிறைபிடிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரி, விவசாயிகளிடம் முந்திரிபயிர் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றிய பெண்ணை பிடித்து காடாம்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர்.பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் முந்திரி விவசாயிகளிடம் இருந்து முந்திரி பருப்புகள் வாங்கி சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனை செய்து வந்தார்.ஆனால் விவசாயிகள், வியாபாரிகளிடம் கொள்முதல் செய்த முந்திரி பயிருக்கான ரூ.2 கோடி அளவில் பணத்தை தராமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது.இது குறித்து கடலுார் எஸ்.பி.அலுவலகத்தில் விவசாயிகளும், வியாபாரிகளும் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை அந்த பெண் வந்திருப்பதாக வந்த தகவலின்பேரில் கடன் கொடுத்தவர்கள் அந்தபெண்ணை முற்றுகையிட்டு சிறைபிடித்து காடாம்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்திய பின் அந்த பெண் மீது போலீசில் நடவடிக்கை எடுக்க இயலாது. கடலுாரில் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்து நிவாரணம் பெற கடன்கொடுத்த விவசாயிகள், முந்திரி வியாபாரிகளுக்கு அறிவுரைகூறி அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ