உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் போலீசிடம் செயின் பறிக்க முயற்சி விருத்தாசலம் அருகே பரபரப்பு

பெண் போலீசிடம் செயின் பறிக்க முயற்சி விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்:: விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி. விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு ஒரத்துாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது மொபட்டில், விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.கம்மாபுரம் அருகே சென்றபோது, எதிரே பல்சர் பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த வாலிபர்கள் இருவர், மொபட்டில் மோதுவது போல் வந்தனர். திடுக்கிட்ட கனிமொழி மொபட்டை நிறுத்த முயன்றபோது, அவர் அணிந்திருந்த செயினை பைக் ஆசாமிகள் பறிக்க முயன்றனர்.சுதாரித்த கனிமொழி, செயினை பிடித்துக் கொண்டு மொபட்டில் இருந்து கீழே விழுந்தபடி கூச்சலிட்டார். உடன் மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றனர்.தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையிலான போலீசார் மர்ம நபர்களை பிடிக்க கம்மாபுரம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ