உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுத்ததால் பரபரப்பு

தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுத்ததால் பரபரப்பு

கடலுார்: கடலுார் சினிமா தியேட்டரில் படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால், நரிக்குறவர்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் மன்மதன், கபிலன், சோனியா, பேபி உள்ளிட்ட 15 பேர், 5 பைக்கில் அலுமினிய பாத்திரம், பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று விற்பனை செய்கின்றனர். நேற்று கடலுார் வந்த அவர்கள், நியூசினிமா தியேட்டரில் கருடன் சினிமா படம் பார்க்க மதியம் 2:00 மணி காட்சிக்கு சென்றனர். அங்கு அவர்கள் படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு, தியேட்டர் வளாகத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.தியேட்டரில் அனுமதிக்க மறுத்ததால் அதிர்ச்சியடைந்த நரிக்குறவர்கள், கடலுார் புதுநகர் போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால், அங்கிருந்தும் அவர்கள் விரட்டப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும், கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இல்லாததால், கடலுார் தாசில்தார் பலராமன், சம்பவ இடத்திற்கு வந்து நரிக்குறவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தனது ஜூப்பில் அழைத்து சென்று, நியூசினிமா தியேட்டரில் டிக்கெட் கொடுக்க செய்து, படம் பார்க்க ஏற்பாடு செய்தார். 15 பேரும் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர்.கடலுாரில் படம் பார்க்க தியேட்டரில் நரிக்குறவர்களை அனுமதிக்க மறுத்த சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி