உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது

கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்: டிரைவர் கைது

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வெளி மாவட்டங்களுக்கு கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரியை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்பும் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ராமஜெயம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம், ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், வெளி மாவட்டங்களுக்கு கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிந்தது. டிரைவருடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, விருத்தாசலம் அடுத்த கலர்குப்பத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஞானசேகர் மகன் வீரசேகர், 21, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ