உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் நிறுத்தும் வாகனங்களால் பெண்ணாடத்தில் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் நிறுத்தும் வாகனங்களால் பெண்ணாடத்தில் போக்குவரத்து பாதிப்பு

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் இடையூறாக நிறுத்தும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பொது மக்கள் அவதியடைகின்றனர்.விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் வழியாக பஸ், லாரி, சிமென்ட் லோடு லாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. இங்கு அரசு, தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வங்கிகள், அரசு, தனியார் மருத்துவமனைகள் உள்ளதால் பழைய பஸ் நிலையம், கடைவீதி பகுதி எந்நேரமும் பொது மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும்.பழைய பஸ் நிலையம் முதல் கிழக்கு வாள்பட்டறை வரை உள்ள கடைகளுக்கு வந்து செல்வோர்கள் தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர். மேலும், தள்ளுவண்டி வியாபாரிகளும் வண்டிகளை சாலையில் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கின்றன.எனவே, பெண்ணாடம் கடைவீதி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்கள், தள்ளுவண்டி கடைகளை அகற்ற போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ