உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து விதிமீறல் கடும் நடவடிக்கை தேவை

போக்குவரத்து விதிமீறல் கடும் நடவடிக்கை தேவை

மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பம் பகுதியில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, தேசிய நெடுஞ்சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் மோசமடையும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீஸ் அதகாரிகள் முன்வருவதில்லை. சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவோர் மற்றும் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், சாலை விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.ஆனால் பஸ்நிலையம் நுழைவு வாயில் முன்பு போலீசார் வாகன தணிக்கை மட்டும் மேற்கொள்கின்றனர். கடைகள், ஒட்டல்கள், வணிக நிறுவனங்கள் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், மந்தாரக்குப்பம் பகுதியில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே, மந்தாரக்குப்பம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி