உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகைப்பட கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

புகைப்பட கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

கடலுார்: கடலுார் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.கடலுாரில் நடந்த முகாமிற்கு, சங்க மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் மயிலாப்பூரான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்றார். கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தார்.சங்க மாவட்ட துணைத் தலைவர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார்.மாவட்ட பொருளாளர் சேகர், மாவட்ட அமைப்பாளர் செந்தில், செயற்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை