உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விதைக்கரும்பு உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

விதைக்கரும்பு உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

நெல்லிக்குப்பம்: விதைக்கரும்பு உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு தரமான விதைக்கரும்பு உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு கடலுார் கரும்பு ஆராய்சி நிலையத்தில் நடந்தது.கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் நடந்த பயிற்சியை, ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜாகுமார் துவக்கி வைத்தார். ஆலை கரும்பு பெருக்க அலுவலர் வில்லியம் அந்தோணி, துரைசாமி, ஜெயச்சந்திரன், பாபு, முருகன், அனிதா, கரும்பு அலுவலர் முருகேசன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.பயிற்சியில், விதை கரும்பு தேர்ந்தெடுத்தல், கரணை நேர்த்தி, குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறிகுறிகள், நோய் கட்டுபாட்டு முறைகள் குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை