உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

கடலுார், : கடலுாரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாஸ்கரன், துணை பொது செயலாளர் ராமமூர்த்தி, பொது செயலாளர் முருகன், பொருளாளர் அரும்பாலன், துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் துவக்கவுரையாற்றினார். இதில், 15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வுபெற்றவுடன் பணப்பலன், ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதிய உயர்வு, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக டி.ஏ. உயர்வு, மற்ற துறைகளை போல் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.நிர்வாகிகள் தேவராஜிலு, முத்துக்குமரன், சிவகுமாரவேலு, கருப்பையன், ரமேஷ்பாபு, ஜீவானந்தம், அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ