உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிச்சை எடுத்த இருவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

பிச்சை எடுத்த இருவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

சிதம்பரம் : சிதம்பரம் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த இருவரை ரயில்வே போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.சிதம்பரம் ரயில் நிலையத்தில்v கடந்த சில மாதங்களாக, இருவர் பிச்சை எடுத்து வந்தனர். அவர்களிடம் சிதம்பரம் ரயில்வே போலீஸ் இஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சேத்துார், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர், 46; மற்றொறு நபர் நாகப்பட்டினம் மாவட்டம், புதுத்தெரு, முகமது அலி,55, என்பது தெரியவந்தது.இருவரையும், இன்ஸ்பெக்டர் அருண்குமார் மீட்டு, உணவு மற்றும் உடைகளை வாங்கி கொடுத்து, பிச்சை எடுக்காமல் வாழ வேண்டும் என்ற, அறிவுரை கூறி, சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் சார்பில் செயல்படும் முதியோர்காப்பகத்தில் ஒப்படைத்தார்.ரயில்வே போலீசாரின் செயல், ரயில்வே ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ