உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஒன்றிய அலுவலம் முற்றுகை

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி ஒன்றிய அலுவலம் முற்றுகை

விருத்தாசலம், : மயான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்கள் பயன்படுத்தக்கூடிய மயான சாலை தனிநபர் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது. மேலும், சேதமடைந்த இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்விதபயனும் இல்லை.இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பின்னர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், ஒன்றிய அலுவலக மேனேஜர் விஜயலட்சுமியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இதில்,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மா.கம்யூ., கட்சி வட்ட செயலாளர்கலைச்செல்வன், நிர்வாகி குமார், கிளை செயலர்கள்வீரா, தமிழ்மணி மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ