| ADDED : ஜூன் 12, 2024 11:58 PM
கடலுார் : அரசு பதிவு பெறாமல் மகளிர் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அரசு உரிமம் பெற்று நடத்த கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விடுதிகள் செயல்படுவதற்காக அரசு உரிமம் பெறுதல், உரிமம் புதுப்பித்தலுக்கு, அரசு இணையதளம் www.tnswp.com-ல் பதிவு செய்ய வேண்டும்.இணையதளத்தில் பதிவு செய்த நகலினை மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலுார் என்ற விலாசத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யாமல் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.