உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் வடலுார் நகராட்சி அதிரடி

பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் வடலுார் நகராட்சி அதிரடி

வடலுார்: வடலுார் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பொருட்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.மாவட்டம் முழுவதும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், வட லுார் நகராட்சியில், கமிஷனர் குணசேகரன் தலைமையில், குழுவினர், வாரச்சந்தை, பஸ் நிலையம், மளிகை கடை, ஹோட்டல்கள் மற்றும் மருந்தகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. இதனால் கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், துணிப்பையை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் உள் ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தெரிந்து, பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ