உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோடை வெயில்தாக்கம் எதிரொலி கடலுாரில் காய்கறி விலை விர்ர்

கோடை வெயில்தாக்கம் எதிரொலி கடலுாரில் காய்கறி விலை விர்ர்

கடலுார்:கோடை வெயில் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைவால், கடலுாரில் காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.கடந்த வாரம் தக்காளி கிலோ 10, 12 ரூபாய் என இருந்தது. தற்போது கிலோ 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. 10 ரூபாயாக இருந்த கத்தரிக்காய் 40 ரூபாயாகவும், சுரைக்காய் கிலோ 20ல் இருந்து 45 ரூபாயாகவும், பீன்ஸ் 40 ரூபாயில் இருந்து 140 ரூபாயாகவும், உருளை கிழங்கு 28 ரூபாயிலிருந்து 38 ஆகவும் அதிகரித்துள்ளது.அதேபோல, சின்ன வெங்காயம் கிலோ 35ல், 58 ரூபாயாகவும், பல்லாரி 20ல் இருந்து 25 ரூபாயாகவும், சவ்சவ் 22ல் இருந்து 50, முள்ளங்கி கிலோ 22ல் இருந்து 30 ரூபாயாக உயர்ந்துள்ளது.பச்சைமிளகாய் கடந்த வாரம் 22 ரூபாயாக இருந்தது 75 ரூபாயாக உயர்ந்துள்ளது. இஞ்சி 155 ரூபாயாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி