உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.இ.டி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வி.இ.டி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் வி.இ.டி., பள்ளி மாணவர்கள், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.விருத்தாசலம் எருமனுார் சாலையில் உள்ள வி.இ.டி., மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய 166 மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர்.மாணவர் அரவிந்த்குமார் 551 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் தீனதயாளன் 549 இரண்டாமிடம், மாணவர் தமிழ்ச்செல்வன் 545 மூன்றாமிடம் பிடித்தனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்விக்குழும தலைவர் பத்மாவதி சக்திவேல், செயலாளர் விஜயலட்சுமி சுரேஷ்குமார், பொருளாளர் மோகனா கொளஞ்சிநாதன், தலைமை ஆசிரியர் எடில்பெர்ட் பெலிக்ஸ் ஆகியோர் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ