உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாகனங்கள் நம்பர் பிளேட் விஷயத்தில் விதிமீறல்: போலீசார், ஆர்.டி.ஓ., கவனிப்பார்களா?

வாகனங்கள் நம்பர் பிளேட் விஷயத்தில் விதிமீறல்: போலீசார், ஆர்.டி.ஓ., கவனிப்பார்களா?

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வாகன நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல்கள் அதிகரித்துள்ளதால், விபத்து மற்றும் குற்றசம்பவங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களை அடையாளப்படுத்தவும், குற்ற சம்பவங்களை எளிதில் கண்டுபிடிக்கவும் வாகனங்களில் நம்பர் எழுதப்படுகின்றன.அந்த வகையில், மோட்டார் வாகன சட்டப்படி இரு சக்கர வாகன முன்புற நம்பர் பிளேட் 45 மி.மீ., உயரம், 285 மி.மீ., அகலம் இருக்க வேண்டும். எழுத்துக்கள் மற்றும் எண்கள் 30 மி.மீ., உயரம், 5 மி.மீ., தடிமன் இருக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் 5 மி.மீ., இடைவெளி விட வேண்டும். பின்புற பிளேட் 100 மி.மீ., உயரம், 200 மி.மீ., அகலம் இருக்க வேண்டும். எழுத்துக்கள் 35 மி.மீ., உயரம், 7 மி.மீ., தடிமன், எண்கள் 40 மி.மீ., உயரம், 7 மி.மீ., தடிமன் இருக்க வேண்டும்.ஒவ்வொன்றுக்கும் 5 மி.மீ., இடைவெளி விட வேண்டும். அதேபோல் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் முன்புறம், பின்புற பிளேட் 120 மி.மீ., உயரம், 500 மி.மீ., அகலம் இருக்க வேண்டும். எழுத்துக்கள் மற்றும் எண்கள் 65 மி.மீ., உயரம், 10.மீ., தடிமன் இருக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் 10 மி.மீ., இடைவெளி விட வேண்டும்.சொந்த வாகனங்களில் வெள்ளை நிற பின்புலத்தில் கருப்பு நிறத்திலும், வாடகை வாகனங்களில் மஞ்சள் நிற பின்புலத்தில் கருப்பு நிறத்திலும் எழுத்துகள், எண்கள் எழுதப்பட வேண்டும். வேறு எந்த வாசகமும், குறியீடும் நம்பர் பிளேட்டில் இருக்கக்கூடாது. ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலானோர் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தங்கள் இஷ்டம்போல் எண்களை எழுதியுள்ளனர். சிலர் நம்பர் பிளேட்டுகளில் தாங்கள் பணிபுரியும் துறையை குறிப்பிட்டுள்ளனர்.மேலும், சிலர் எண்களை அச்சிடாமல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள், ஜாதிய குறியீடுகள் அச்சிட்டுள்ளனர். அதிலும் சிலர் வாகனங்களில் நம்பர் பிளேட்டே இல்லாமலும், அப்படியே இருந்தாலும் எண்கள் எழுதாமல் பயன்படுத்துகின்றனர்.இதனால், விபத்து மற்றும் சமூக விரோத குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த விதிமீறல்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டுகொள்வது இல்லை. இதனால், பல சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் போலீசாரும் திணறுகின்றனர்.எனவே, மாவட்டத்தில் நம்பர் பிளேட்டுகளில் விதிமீறிய வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை