உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் அதிகாரிகளை கண்டித்து மறியல்

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் அதிகாரிகளை கண்டித்து மறியல்

விருத்தாசலம்: ரசீது வழங்காததால், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விருத்தாசலம் பகுதி விவசாயிகள் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.நெல், வேர்க்கடலை, எள் உள்ளிட்ட அறுவடை காலங்களில் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கு மேல் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வர்த்தகம் நடக்கிறது. தற்போது எள், மணிலா சாகுபடி பணி நடப்பதால், நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரம் முட்டைகள் வரை எள், வேர்க்கடலை கொள்முதல் செய்யப்படுகிறது.நேற்று 800 மூட்டை எள், 500 மூட்டை மணிலா கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட எள் மற்றும் மணிலா, தேங்காய் பருப்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கு உரிய ரசீது வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் விவசாயிகள் காலையில் இருந்து காத்திருந்தும் மாலை 5:00 மணி வரை ரசீது வழங்காததால் ஆத்திரமடைந்தனர். இதனால், அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சர்வர் பிரச்னை உள்ளதால் ரசீது வழங்க முடியவில்லை. விரைவில் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையேற்று விவசாயிகளை மறியலை கைவிட்டனர். பின்னர், அனைத்து விவசாயிகளுக்கும் ரசீது வழங்கப்பட்டது.விவசாயிகள் மறியலால் மாலை 5:00 மணி முதல் 5:30வரையில் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை