உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்முறை வாக்காளர்களுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு

முதல்முறை வாக்காளர்களுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு

விருத்தாசலம், : விருத்தாசலம் மாடல் ஓட்டுச்சாவடிகளில் முதல்முறை வாக்காளர்களுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் 286 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காலை 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், மாடல் ஓட்டுச்சாவடியான பெரியார் நகர் இன்பேண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முதல்முறையாக ஓட்டளிக்க வந்த வாக்காளர்களுக்கு மேள தாளத்துடன் வரவேற்பு தரப்பட்டது. அவர்களுக்கு பள்ளி தாளாளர் விஜயகுமாரி பன்னீர் தெளித்து, சந்தனம், ரோஜா பூக்கள் வழங்கினார். இதேபோல், பெண்களுக்கான தனி ஓட்டுச்சாவடியில் பெண் வாக்காளர்களுக்கு சந்தனம், குங்குமம், பூக்கள் வழங்கப்பட்டது.கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி நடுநிலைப் பள்ளிகள், துவக்கப் பள்ளிகள் உள்ளிட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் ஆண், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் சாய்தளத்தில், வீல் சேரில் அழைத்து செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி