உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டுச்சாவடிகளுக்கு வீல் சேர் ரெடி

ஓட்டுச்சாவடிகளுக்கு வீல் சேர் ரெடி

பரங்கிப்பேட்டை: ஓட்டுச்சாவடி மையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஓட்டுப்போட வசதியாக, வீல் சேர்கள் தயார் நிலையில் உள்ளது.கடலுார் மாவட்டத்தில், தேர்தல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க வசதியாக, வீல் சேர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை பகுதிகளில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மத்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மேல்நிலைப்பள்ளி உட்பட 8 இடங்களில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.இந்த மையங்களில் பயன்படுத்த வீல் சேர்கள் நேற்று, வந்துள்ளது. அவைகள் பேரூராட்சி அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !