மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
04-Feb-2025
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபி ேஷகம் கடந்த 2011ம் ஆண்டு நடந்தது. 13 ஆண்டுகள் நிறைவடைந்ததால், இந்தாண்டு பிப்., மாதத்திற்குள் கும்பாபி ேஷகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதையடுத்து, அரசின் அனுமதியுடன் கடந்த ஆண்டு மே மாதம் பாலாலய பூஜைகள் துவங்கியது. முதற்கட்டமாக ராஜகோபுரத்தில் சுதை சிற்பங்கள் புனரமைப்பு செய்ய சாரம் கட்டப்பட்டது. ஆனால், பணி தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவில் ராஜகோபுரத்தை தவிர்த்து 4 பெரிய கோபுரங்கள், 2 பெரிய விமானங்கள், 16 சிறிய விமானங்களில் சுதை சிற்பங்களை புனரமைப்பு செய்ய நிதியுதவி உதவி வழங்க உபயதாரர்கள் முன்வந்துள்ளனர். இதற்காக முதற்கட்டமாக கோபுரம் மற்றும் விமானங்களில் சாரம் கட்டப் பட்டுள்ளது. ஆனாலும் பணி கிடப்பில் உள்ளது. எனவே, திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில், 'மழை உள்ளிட்ட காரணங்களால் திருப்பணியை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, திருப்பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. விரைந்து முடிக்க துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
04-Feb-2025