உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாராயம் பதுக்கிய பெண் கைது

சாராயம் பதுக்கிய பெண் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே புதுச்சேரி சாராயம் பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த பாலுார் பகுதியில் நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சன்னியாசிப்பேட்டை காந்தி நகரை சேர்ந்த வள்ளி, 35; தனது வீட்டின் அருகில் புதுச்சேரி சாராயம் 10 லிட்டர் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.அதையடுத்து, நடுவீரப்பட்டு போலீசார் வள்ளியை கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ