உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடன் பிரச்னையில் மோதல் காயமடைந்த பெண் இறப்பு

கடன் பிரச்னையில் மோதல் காயமடைந்த பெண் இறப்பு

திட்டக்குடி: கடனை திருப்பி கேட்ட தகராறில் காயமடைந்த பெண் இறந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி மகாலட்சுமி,40; இவரிடம், அதே பகுதியை சேர்ந்த முருகன் ரூ.9.60 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பி தராததால் நேற்று முன்தினம் இரவு 9:45 மணிக்கு, மகாலட்சமி, அவரது தம்பி தர்மராஜ்,38; தாய் மலர்,55; ஆகியோர், முருகன் வீட்டிற்கு சென்று கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர்.அப்போது தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். அதில், காயமடைந்த மலர், முருகன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி தன்னை தாக்கியதாக திட்டக்குடி போலீசில் புகார் அளித்தார்.தொடர்ந்து அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல்சிகிச்சைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார்.அதனைத் தொடர்ந்து திட்டக்குடி போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து முருகன், ராஜேஸ்வரி உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி