உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்கூட்டர் மோதி பெண் படுகாயம்

ஸ்கூட்டர் மோதி பெண் படுகாயம்

குள்ளஞ்சாவடி : ஸ்கூட்டர் மோதியதில் நடந்து சென்ற பெண் படுகாயமடைந்தார்குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம், வடக்கு தெருவை சேர்ந்தவர், தங்கப்பவனு மனைவி, அஞ்சம்மாள், 55. இவர் நேற்று முன்தினம், குள்ளஞ்சாவடி-ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பின்புறமாக வேகமாக வந்த டிவிஎஸ்., ஸ்கூட்டர் ஒன்று, அஞ்சம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அஞ்சம்மாள் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை