உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் பைக் திருடிய நபரை, கடலுார் சோதனைச் சாவடியில் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.பெண்ணாடம் அடுத்த தாழநல்லுாரை சேர்ந்தவர் அழகுபெருமாள் மகன் நாராயணசாமி, 42. கடந்த 13ம் தேதி விருத்தாசலம் புதுப்பேட்டையில் உள்ள பேட்டரி கடைக்கு பைக்கில் வந்திருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி வழக்குப் பதிந்து விசாரித்து வந்தார். இந்நிலையில், கடலுாரில் சோதனைச் சாவடியில் போலீசாரின் வாகன சோதனையில், திருடுபோன வாகனத்தை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர், நெல்லிக்குப்பம் மெகர் அலி மகன் நிஜாமுதீன், 29, என்பதும், விருத்தாசலத்தில் பைக்கை திருடியதையும் ஒப்புக் கொண்டார்.விருத்தாசலம் போலீசார் சென்று, நிஜாமுதீனை கைது செய்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை