உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி வாலிபர் பலி

பைக் மோதி வாலிபர் பலி

கிள்ளை : சிதம்பரம் அருகே பேரிகார்டு மீது பைக் மோதிய விபத்தில், வாலிபர் இறந்தார்.மயிலாடுதுறை மாவட்டம், சித்தமல்லி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 28; இவர், கடந்த 21ம் தேதி இரவு கடலுாரில் இருந்து சித்தமல்லிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். சிதம்பரம் அடுத்த ஏ. மண்டபம் அருகே செல்லும்போது, சாலையை பிரிக்கும் வகையில் வைக்கப்பட்ட பேரிகார்டு மீது பைக் மோதியது. இந்த விபத்தில், மணிகண்டன் படுகாயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் இறந்தார்.இது குறித்து, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !