உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் 107 திருமணங்கள்

திருவந்திபுரம் கோவிலில் ஒரே நாளில் 107 திருமணங்கள்

கடலுார் : தை மாத முதல் முகூர்த்த நாள் என்பதால், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 107 திருமணங்கள் நடந்தது.கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதப்பெருமாள் கோவில் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோவிலில், திருமணம் செய்வோர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இக்கோவில் நடு நாட்டு திருப்பதி என்றும், இரண்டாவது திருப்பதி என்றும் அழைக்கப்படுகின்றது.இக்கோவிலில் சுபமுகூர்த்த நாளில் கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் நுாற்றுக்கணக்கில் வந்து திருமணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தை மாதம் முதல் முகூர்த்த நாளான நேற்று திருவந்திபுரம் தேவநாதப்பெருமாள் சுவாமி கோவிலில், அதிகாலை 4:00 மணி முதல் திருமணங்கள் நடைபெற தொடங்கியது.திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்று, கோவில் திருமண மண்டபத்தில் 77 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 30 திருமணங்கள் என 107 திருமணம் நடந்தது. இதனால், திருவந்திபுரம் பகுதியில் அணிவகுத்து நின்ற ஏராளமான வாகனங்களால், கடலுார்-பாலுார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை