உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  1,228 டன் யூரியா வந்தது

 1,228 டன் யூரியா வந்தது

விருத்தாசலம்; கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சம்பா சாகுபடி துவங்கி நடந்து வருகிறது. மாவட்ட விவசாயிகளின் யூரியா பயன்பாட்டிற்கு, சென்னை மணலியில் உள்ள எம்.எப்.எல்., நிறுவனத்தில் இருந்து 1,228 மெட்ரிக் டன் யூரியா, 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில், விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனுக்கு நேற்று வந்தடைந்தது. அங்கிருந்து அரியலுார் மாவட்டத்திற்கு 50 மெட்ரிக் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கடலுார் மாவட்ட கூட்டுறவு சொசைட்டிகளுக்கு, 300 மெட்ரிக் டன் யூரியாவும், மீதமுள்ளவை, மாவட்டத்தில் உள்ள தனியார் உர நிறுவனங்களுக்கும், லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ