உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மத்திய அரசை கண்டித்து மறியல் தொழிற்சங்கத்தினர் 125 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து மறியல் தொழிற்சங்கத்தினர் 125 பேர் கைது

கடலுார் : மத்திய அரசை கண்டித்து கடலுாரில் சாலை மறியலில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அண்ணா மேம்பாலம் அருகே அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஆளவந்தார், மின்வாரிய தொ.மு.ச., கோட்ட செயலாளர் குருசந்திரன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் ராஜேந்திரன், போக்குவரத்து கழக தொ.மு.ச., மண்டல தலைவர் பழனிவேல், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் குணசேகரன் கண்டன உரையாற்றினர்.இதில், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கக்கூடாது. மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 125 பேரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர்.தொழிற்சங்க நிர்வாகிகள் திருமுருகன், ஸ்டாலின், தேசிங்கு, மனோகரன், சரவணன், ராஜகோபால், பாஸ்கரன், குளோப், ஆனந்தன், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !