உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் துாத்துக்குடிக்கு அனுப்பி வைப்பு

 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் துாத்துக்குடிக்கு அனுப்பி வைப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள், எருமனுார் சாலையில் உள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டன. சமீபத்தில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைத்திருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் முளைத்து வீணாகின. தொடர்ந்து, நெல் மூட்டைகளை மாற்றி, புதிய சாக்குகளில் பாதுகாக்கும் பணி நடந்தது. இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் எருமனுார் மற்றும் நெய்வேலி பகுதி களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் இருந்து,2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள், துாத்துக்குடிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்காக, 50க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி வரப்பட்ட நெல் மூட்டைகள், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் ஏற்றி, அனுப்பி வைக்கப்பட்டன. இவை அங்குள்ள ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ