உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதையில் வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம் விதிப்பு

போதையில் வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம் விதிப்பு

கடலுார் : கடலுாரில் மது அருந்தி வாகனம் ஓட்டிய 25 பேருக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடலுார் மாவட்டத்திற்குள் கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையான ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் ரோந்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, நேற்று வாகன ஓட்டுனர்கள் கடத்தி வந்த ஒன்றிரண்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கீழே ஊற்றி அழித்தனர். மது அருந்தி வாகனம் ஓட்டி வந்த 25 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2 லட்சத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ