மேலும் செய்திகள்
சமையல் கலைஞர் பைக் மோதி பலி
20 hour(s) ago
காற்றழுத்த தாழ்வு எதிரொலி படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்
21 hour(s) ago
சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
21 hour(s) ago
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
21 hour(s) ago
புவனகிரி: புவனகிரி அடுத்த ஆ.மஞ்சக்குழி வானவில் கைப்பந்து மற்றும் தமிழன் கபடி அணி இணைந்து 33ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.ஆ.மஞ்சக்குழி டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடலில் நடந்த பொங்கல் கலை விழா விற்கு அன்புச்செல்வன் வரவேற்றார். ஸ்டீபன்ராஜ், ஜோதிபாஸ், விக்னேஷ், தமிழ்வாணன், வினித், பரத், சதீஷ்குமார் அருண், அபிலன் முன்னிலை வகித்தனர்.பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., அரசுப்பொதுத்தேர்வில் அரசுப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்கள், பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெறறவர்கள்.எல்.கே.ஜி., முதல் கல்லுாரி மாணவர்கள் என தனித்தனியாக கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.விழாவில் அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக பாரம்பரிய பொங்கல் வைத்து கலை விழாவாக கும்மியடித்து ஆடல் பாடலுடன் கொண்டாடினர்.ராஜமுல்லை நன்றி கூறினார்.
20 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago