மந்தாரக்குப்பம்: நெய்வேலி மந்தாரக்குப்பத்தில், 500 க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். கம்மாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் மந்தாரக்குப்பம் ராஜலட்சுமி தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் முருகமணி, அருளழகன், உமாமகேஸ்வரன், அருண், கனகசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சின்னரகுராமன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் காப்பான்குளம், நண்டுகுழி, மேலக்குப்பம், புலவன்குப்பம், சின்னகாப்பாங்குளம், அம்மேரி, தெற்கிருப்பு, கூனங்குறிச்சி, மேற்குஇருப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். கட்சியில் இணைந்த அனைவருக்கும் துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்தினர். நிகழ்ச்சியை டாக்டர் பிரியதர்ஷன் ஒருங்கிணைத்தார். முன்னாள் எம்.எல் .ஏ., சிவசுப்பிரமணியம், நகர செயலாளர் மனோகரன், கழக, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.