| ADDED : பிப் 21, 2024 07:31 AM
நெய்வேலி : என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் காப்பர் கேபிள் திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.நெய்வேலி என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு மண்மேடு வழியாக காப்பர் கேபிள்களை திருடுவதற்காக 6 பேர் கொண்ட கும்பல் வந்தனர். தகவலறிந்த பாதுகாப்பு படையினர்திருட்டு கும்பலை தேடினர். நேற்று மதியம் 2:00 மணியளவில் பாதுகாப்பு படையினர் திருட்டு கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருட வந்த கும்பல் காப்பரை திருடிய பிறகு அசதியில் துாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து காப்பர் திருடிய பெரியாக்குறிச்சியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சுரேந்தர். 24; குறவன்குப்பம் முருகேசன் மகன் ராமர்,36; மாணிக்கம் மகன்வீரமணி.42; வடலுாரை சேர்ந்த தாஸ்.55; மற்றும் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேரை, தெர்மல் போலீசாரிடம், தொழிலக பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார்வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.