உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்பனை 9 பேர் கைது

லாட்டரி விற்பனை 9 பேர் கைது

சிதம்பரம்; சிதம்பரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, மாவட்ட தனிப்படை போலீசார் சிதம்பரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, பஜனை மடத்தெரு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக 9 பேரை பிடித்து சிதம்பரம் நகர போலீசில் ஒப்படைத்தனர்.சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து, சபாநாயகர் தெரு வைப்புச்சாவடியை சேர்ந்த தில்லைக்கண்ணு மகன் சிவானந்தம், 27; முருகன், 53; சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு மணிவேல், 40; சாத்தான்குடி பாலமுருகன், 52; சிதம்பரம் முத்துமாணிக்கம் தெரு மாரியப்பன், 38; தொப்பையான் தெரு ராஜேஷ், 35; உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்