உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு 

பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு 

விருத்தாசலம்: முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் மனைவி உஷா, 36; சக்திவேல் மனைவி சுதா. இருவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களுக் குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சுதா, ஆதரவாளர்கள் சந்தியா, சின்னசாமி ஆகியோர் உஷாவை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார், சுதா, சந்தியா, சின்னசாமி உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி