உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டிற்குள் புகுந்த முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு

வீட்டிற்குள் புகுந்த முதலை சிதம்பரம் அருகே பரபரப்பு

சிதம்பரம்: வீட்டிற்குள் புகுந்த முதலையை. வனத்துறையினர் பிடித்து ஏரியில் விட்டனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த நாஞ்சலுார் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ரஷீத். இவர் நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு வீட்டின் தெருக்கதவை திறந்தபோது, வராண்டாவில் 8 அடி நீளமுள்ள முதலை உளவியதை கண்டு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, வீட்டில் இருந்து முதலையை வெளியே விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த்பாஸ்கர், வனவர் பிரபு தலைமையில், வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர், அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் விரைந்து சென்று நாஞ்சலுார் கிராமத்தில் சுற்றித் திரிந்த 8 அடி நீளமுள்ள 110 கிலோ எடை கொண்ட முதலையை பாதுகாப்பாக பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை