உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆயுதத்துடன் திரிந்தவர் சிதம்பரத்தில் கைது 

ஆயுதத்துடன் திரிந்தவர் சிதம்பரத்தில் கைது 

சிதம்பரம் : சிதம்பரத்தில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், பச்சையப்பன் பள்ளி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை சந்தேகதத்தின் பேரில் நிறுத்தினர். இதில், ஒருவர் பிடிப்பட்டார். ஒருவர் தப்பியோடினார். சிக்கியவர் சிதம்பரம் மந்தகரையைச் சேர்ந்த விஜி, 41; என்பது தெரிந்தது. இவரிடம் இருந்து 10 அரிவாளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விஜியை கைது செய்து, தப்பியோடிய அண்ணாமலை நகர் பாபுவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை