உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடலுார் தைப்பூச விழா அன்னதானத்திற்கு 10 டன் காய்கறிகள் அனுப்பிய இஸ்லாமியர்

வடலுார் தைப்பூச விழா அன்னதானத்திற்கு 10 டன் காய்கறிகள் அனுப்பிய இஸ்லாமியர்

கடலுார் : வடலுார் தைப்பூச விழா அன்னதானத்திற்கு, கடலுார் இஸ்லாமியர் ஒருவர், 50 மூட்டை அரிசி, 10 டன் காய்கறிகள் வழங்கினார்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.கே.பி., காய்கறி கடை உரிமையாளர் மற்றும் சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவர் பக்கீரான். சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இவர், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் நடக்கும் தைப்பூச விழா அன்னதானத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 டன் காய்கறிகள் மற்றும் 50 அரிசி மூட்டைகளை சத்திய ஞான சபைக்கு அனுப்பி வைத்தார். மேலும் 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும் அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத், வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், நகர செயலாளர் வள்ளி விலாஸ் சீனிவாசன், கவுரவ தலைவர் கணேசன், தேவி முருகன், மாவட்ட இணை செயலாளர் சதீஷ், நகர இணை செயலாளர் சரவணன் மற்றும் வெங்கட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பாரதி
ஜன 25, 2024 23:15

இந்த மாதிரியெல்லாம் அவங்க காச வாங்கி உணவை வாங்கி அன்னதானம் போடாதீங்க. அதை சாப்பிட்டா அதை சாப்பிட்டவங்களுக்கு மதம் மாறுவதற்கு எண்ணம் வரும்..


பேசும் தமிழன்
ஜன 25, 2024 20:11

அய்யா உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான்.... உலகம் அழியாமல் உள்ளது.... மனிதனுக்கு மதம் தேவை... ஆனால் மனிதனுக்கு மதம் பிடிக்க கூடாது... உங்களை வாழ்ந்த வயதில்லை.... வணங்குகிறேன் ????


பேசும் தமிழன்
ஜன 25, 2024 20:08

அவர்களும் நல்லவர்கள் தான்.... கான் கிராஸ் கூட்டணி அல்லக்கை கட்சிகள் தான்.... இல்லாததையும்..... பொல்லாததையும் சொல்லி .....மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள் .....நாம் அனைவரும் இந்தியர்களே / சகோதரர்களே ???


புதிய வீடியோ