உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கமிஷனரை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

கமிஷனரை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

கடலுார் : கடலுாரில் மாநகராட்சி கமிஷனரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடலுார் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை திட்ட வரி, வாடகை வரி போன்றவை நிலுவையில் உள்ளது. அதை மாநகராட்சி ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரி வசூலில் கெடுபுடி காட்டி வரும் மாநகராட்சி கமிஷனரை கண்டிக்கும் விதமாக, நகர பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.வரி நிலுவை வைத்திருக்கும் பணக்காரர்களை விட்டுவிட்டு ஏழை எளிய மக்களை ஏன் வாட்டி வதைக்கிறீர்கள் என, அதில் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால் கடலுார் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி