உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விரக்தியில் வாலிபர் தற்கொலை 

 விரக்தியில் வாலிபர் தற்கொலை 

பண்ருட்டி: திருமணமாகாத விரக் தி யில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பாலசந்தர்,30; கூலி தொழிலாளி; திருமணமாகவில்லை. இவர், தசை பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் இருந்து வந்தார். திருமணமாகவில்லை என்கிற மனவிரக்தியில் இருந்தவர், கடந்த 26ம் தேதி வீட்டில் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை