உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமி கடத்தலுக்கு உடந்தை: இரு வாலிபர்கள் கைது

சிறுமி கடத்தலுக்கு உடந்தை: இரு வாலிபர்கள் கைது

விருத்தாசலம் : சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, கடந்தாண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி கோ.பூவனுார் கிராமத்தைச் சேர்ந்த அஜய்தேவன், 19, என்பவர் கடத்திச் சென்றார்.இந்த கடத்தலில் உளுந்துார்பேட்டை அடுத்த பாலி கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார், 19; கோ.பூவனுார் கிராமத்தைச் சேர்ந்த சுசில், 19 ஆகிய இருவரும் உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அஜய்குமார், சுசில் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை