உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேர்தல் அறிவிப்பால் வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு

தேர்தல் அறிவிப்பால் வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு

வேப்பூர், : வேப்பூர் கூட்டுரோட்டில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். ஆத்தூர், தலைவாசல், மடப்பட்டு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகள், தானியங்கள், பழ வகைகளையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, திருக்கோவிலூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி, மால் ஆடுகளையும் கொண்டு வந்து விற்பனை செய்வர்.இங்கு, ஆடுகளை வாங்கும் வியாபாரிகள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு இறைச்சிக்காக அனுப்புவர். வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் வாரச்சந்தை குத்தகை ஏலம் நடத்தப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாரச்சந்தைக்கு வருவதால் ஏலம் எடுப்பதில் குத்தகைதாரர்கள் இடையே போட்டி நிலவும்.இந்த ஆண்டிற்கான குத்தகை ஏலம் நாளை (21ம் தேதி) நடக்க உள்ளதாக வேப்பூர் ஊராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டதால், தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !