உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பத்திரக்கோட்டையில் ஆபத்தான நிலையில் தொகுப்பு வீடுகள்

பத்திரக்கோட்டையில் ஆபத்தான நிலையில் தொகுப்பு வீடுகள்

நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டையில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி, பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 30 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது.இந்த தொகுப்பு வீடுகள் சரியான பராமரிப்பு இல்லாததால் பல வீட்டின் மேற்புர சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இரவு நேரத்தில் வீட்டினுள் தூங்கவே அச்சமடைந்து வருகின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியில் துாங்கி வருகின்றனர். ஆகவே இந்த வீடுகளை ஆய்வு செய்து வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ